UPDATED : ஏப் 29, 2026 10:07 AM
ADDED : ஏப் 29, 2026 10:11 AM

எம்.இ.எக்ஸ்.டி., எனும் ஜப்பானிய அரசின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அமைச்சகம், ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் முதுநிலை அல்லது முனைவர் பட்டப்படிப்புகளுக்கு படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
படிப்புகள்:
மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பார்மசூட்டிக்கல் உட்பட பல்வேறு துறைகளில் ரெகுலர் மற்றும் நான் ரெகுலர் முறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும். ஏப்ரல் 2, 1992ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். மாணவர்கள் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும். போதிய உடல் தகுதியும் முக்கிய தகுதியாக கருதப்படுவதால், உரிய மருத்துவரிடம் இருந்து உடல் மற்றும் மனநிலை தகுதி சான்று பெற வேண்டும்.
உதவித்தொகை விபரம்:
பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு கட்டணம், சேர்க்கைக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் அனைத்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. போக்குவரத்து செலவுகளையும் ஜப்பானிய அரசே ஏற்கிறது.
* நான்-ரெகுலர் மாணவர்களுக்கு மாதம் 1,43,000 யென்
* மாஸ்டர் அல்லது தொழில்முறை பட்டப்படிப்பு படிக்கும் ரெகுலர் மாணவர்களுக்கு மாதம் 1,44,000 யென்
* முனைவர் படிப்பு படிக்கும் ரெகுலர் மாணவர்களுக்கு மாதம் 1,45,000 யென் வழங்கப்படுகிறது.
மேலும், படிப்பு மற்றும் துறையை பொறுத்து மாதாந்திர கல்வி உதவித்தொகையாக 2,000 யென் அல்லது 3,000 யென் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 15
விபரங்களுக்கு:
www.education.gov.in
