sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளைஞர்களுக்கு புரிதல் தேவை: இறையன்பு பேச்சு

/

இளைஞர்களுக்கு புரிதல் தேவை: இறையன்பு பேச்சு

இளைஞர்களுக்கு புரிதல் தேவை: இறையன்பு பேச்சு

இளைஞர்களுக்கு புரிதல் தேவை: இறையன்பு பேச்சு


UPDATED : செப் 09, 2024 12:00 AM

ADDED : செப் 09, 2024 08:05 AM

Google News

UPDATED : செப் 09, 2024 12:00 AM ADDED : செப் 09, 2024 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
காதல், இனக்கவர்ச்சியை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் பேசினார்.

கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ.,சக்திவேல் வரவேற்றார்.

இலக்கியத்தில் காதல் தலைப்பில் இறையன்பு பேசியதாவது:


காதல் என்பது உள்ளத்தோடு தொடர்பு, உணர்வு, புரிதல் கொண்டது. முதல்முறை பார்க்கும்போது சிலிர்ப்பை ஏற்படுத்தும். இனக்கவர்ச்சியானது தடுமாற்றம், கணநேர மயக்கம், நீர்க்குமிழி போன்றது. அதனால் ஈர்க்கப்பட்டால் வாழ்க்கை தொலைந்து மோசமாகிறது.

ஜாதி, மதம், பணம், கோத்திரம், புகழ் பார்த்து வருவதல்ல காதல். காதலர்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். அது இல்லற வாழ்விலும் தொடர வேண்டும். உலகில் உன்னதமானது நட்பு. எந்த சூழலிலும் காதலர்கள் விட்டுகொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு ஆன்மாவில் 2 உடல்கள் இருப்பது காதல் என்றார் அரிஸ்டாட்டில்.

இதிகாசங்களில் காதல்தான் மையப்பொருள். பட்டினப்பாலை காதல் பற்றி பேசுகிறது. நிறைவேறாத காதலை அதிகம் நேசிக்கிறோம். காதல் தோல்வியில் பெயர்கள்மாறுகின்றன. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.

திரை இசையில் இலக்கியம் என்ற தலைப்பில் திருச்சி நகைச்சுவை மன்ற தலைவர் சிவகுருநாதன் பேசினார். ஆர்.டி.ஓ.,சாலினி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us