தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம்

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம்

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம்


UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM

ADDED : ஜூலை 20, 2024 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM ADDED : ஜூலை 20, 2024 10:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்:
பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை, வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, கோவை வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடாசலம் கூறியிருப்பதாவது:-


கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ், பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் 2024-25ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 3 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதி உதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்ககூடிய திட்டங்களின் அடிப்படையில், சுய தொழில்கள் நிறுவ வேண்டும். வங்கிகடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் மானிய தொகை போக மீதமுள்ள தொகைக்கு வங்கிக்கடன் உதவி பெறுவதற்கான சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் பயன்களை பெறுவதற்கு வயது வரம்பு 21 முதல் 40 வரையில் இருக்க வேண்டும். கல்வித்தகுதி, இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்ககூடாது. கணிணித்திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெறத்தகுதியுடையவர்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் இணையதளத்தில் விண்ணப்பத்து, அதன் நகலினை தேவையான நகலினை தேவையான ஆவணங்களோடு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை விரிவான திட்ட அறிக்கையுடன் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us