தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தீன்தயாள் திட்டத்தில் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

தீன்தயாள் திட்டத்தில் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

தீன்தயாள் திட்டத்தில் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜன 22, 2026 12:17 PM

ADDED : ஜன 22, 2026 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2026 12:17 PM ADDED : ஜன 22, 2026 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2012 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்கிறது.

இத்திட்டத்தில் ட்ரோன் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தேவதானப்பட்டி கல்வி அறக்கட்டளை நிறுவனத்தில் 'ஐ.டி., ஹெல்ப்டெஸ்க் அட்டண்டன்ட்' பயிற்சி, சின்னமனுார் ஜெ.பி.எம்., சுவாமி நிறுவனத்தில் 'கீ அக்கவுன்ட்ஸ் மேனேஜ்மென்ட் எக்ஸ்கியூடிவ் கூரியர்' பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

பயிற்சி காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். பயிற்சியின் போது சீருடை, உணவு, தங்கும் இடம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு, சுயதொழில் துவங்க உதவி செய்யப்படும். வேலைவாய்ப்பு பெற்றால் 6 மாதங்களுக்கு ரூ.1,270 ஊக்கதொகையாக வழங்கப்படும். விருப்புள்ள இளைஞர்கள் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us