UPDATED : ஜன 08, 2026 10:22 AM
ADDED : ஜன 08, 2026 10:22 AM
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சி பாசறை நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கோபிநாத் வரவேற்றார்.
தமிழ் மாநில அளவில் இளையோர் இலக்கியப் பயிற்சி பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பயிற்சியின் நோக்கம் குறித்து விரிவாக பேசினார். இதயம் தொட்ட எழுத்தாளர்கள், காலத்தை வென்ற கவிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் பேசினர்.
தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா, தமிழ்துறை பேராசிரியர்கள் செய்தனர்.

