தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடம் நடத்த நேரமில்லை... பதிவேற்றப் பணிக்கோ பஞ்சமில்லை!

பாடம் நடத்த நேரமில்லை... பதிவேற்றப் பணிக்கோ பஞ்சமில்லை!

பாடம் நடத்த நேரமில்லை... பதிவேற்றப் பணிக்கோ பஞ்சமில்லை!


UPDATED : நவ 09, 2026 12:42 PM

ADDED : நவ 09, 2026 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:42 PM ADDED : நவ 09, 2026 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். மேஜை மீது இருக்கும் மொபைல்போன் வாயிலாக அடுத்தடுத்து அறிவிப்புகள்... ஒரு பக்கம் மாணவர்களின் கவனம், மறுபக்கம் இணையவழிப் பதிவுகள்! பாடம் நடத்துவதா, மொபைலில் பதிவேற்றம் செய்வதா என்ற கேள்வியுடன் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பணிகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் பல்வேறு மொபைல் மற்றும் ஆன்லைன் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது:

மாணவர்களிடையே மொபைல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் பாதிப்புகளை எடுத்துக்கூறி தேவையின்றி மொபைல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், பள்ளியில் ஆசிரியர்களாகிய நாங்களே பெரும்பாலான நேரத்தை மொபைல் போனில் செலவிட வேண்டிய நிலை உள்ளது.

கடந்த ஆட்சி க்காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு மொபைல் சார்ந்த பணிகள் தொடர்ந்து வருகின்றன. தற்போது எஸ்.எம்.சி., என்.ஐ.எல்.பி., திறன்+, எல்.எல்.ஏ.எஸ்.எஸ்., கல்வித் திருவிழா தொடர்பான பணிகள், ஆன்லைன் பதிவுகள், யு.டி.ஐ.எஸ்.இ. உள்ளிட்ட பல்வேறு பணிகளை மொபைல் மற்றும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதனால், எந்நேரமும் மொபைல் போனில் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாணவர்களிடம் மொபைல் பயன்பாட்டைக் குறைக்க அறிவுறுத்தும் நாங்களே, மொபைல் பயன்பாட்டில் மூழ்கிக் கிடப்பது முரண்பாடாக உள்ளது. கூடுதல் பணிகளால் மாணவர்களுக்குப் போதிய நேரம் ஒதுக்கி முறையாகக் கற்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரிகளின் நிர்வாகக் கண்ணோட்டத்தில் பணிகள் ஒதுக்கப்படுவதே இதுபோன்ற சிக்கல்களுக்குக் காரணம். கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் களநிலைப் பிரச்னைகளை ஆய்வு செய்து, தேவையற்ற ஆன்லைன் பணிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இது மாணவர்களின் கற்றல் திறனைப் பாதிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us