UPDATED : மார் 19, 2025 12:00 AM
ADDED : மார் 19, 2025 09:19 AM
அன்னுார்:
விலங்கியல் தேர்வு கடினமாக இருந்தது என பிளஸ் 2 மாணவர்கள் தெரிவித்தனர்.
அன்னூர் வட்டாரத்தில், அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு உயிரியல் தேர்வு நடந்தது.
தாவரவியல் எளிது
அஜய், கெம்பநாயக்கன்பாளையம்: உயிரியல் தேர்வில், தாவரவியல் பாடத்தில் 35 மதிப்பெண்களுக்கும், விலங்கியல் பாடத்தில் 35 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் தாவரவியல் பாட கேள்விகள் எளிதாக இருந்தன. விலங்கியல் பாட கேள்விகள் கடினமாக இருந்தன.
5 மதிப்பெண் கேள்வி கடினம்
ஹரிஷ், அன்னுார்:
உயிரியியலில், 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் மூன்று மதிப்பெண் பகுதியில், ஆறு கேள்விகளும், ஐந்து மதிப்பெண் பகுதியில் நான்கு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன.
எளிதில் தேர்ச்சி பெறலாம்
சதீஷ், கெம்ப நாயக்கன்பாளையம்: ஒரு மதிப்பெண் பகுதியில் 16 கேள்விகளும், இரண்டு மதிப்பெண் பகுதியில் எட்டு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. இவை மிக எளிதாக இருந்தன. எளிதில் தேர்ச்சி பெறலாம். அதிக மதிப்பெண் பெற முடியும்.