மக்களின் பாதுகாப்பு கருதி 16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை; அவை என்னென்ன?
மக்களின் பாதுகாப்பு கருதி 16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை; அவை என்னென்ன?
ADDED : ஜூன் 20, 2026 02:45 PM

நமது நிருபர்
மக்களின் பாதுகாப்பு கருதி ஆரோக்கியத்திற்கு ஆபத்து என தெரிவித்து 16 பிக்ஸட்-டோஸ் காம்பினேஷன் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகள் இந்த உத்தரவுகள் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினரும் சட்டத்திற்கு இணங்க தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தடை செய்யப்பட்ட 16 மருந்துகளின் பட்டியல்:
* அசிடைல் சாலிசிலிக் அமிலம் + எத்தோஹெப்டசைன்
* டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு
* டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு + குளோர்டையாஸெபாக்சைடு
* கில்க்லாசைட் + குரோமியம் பிகொலினேட்
* பாராசிட்டமால் + லிக்னோகைன்
* அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ் + லாக்டோபாகிலஸ்
* அமோக்ஸிசிலின் + க்ளோக்சாசிலின் + லாக்டிக் ஆசிட் பேசிலஸ் + செராடியோபெப்டிடேஸ்
* அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ்
* செபாட்ராக்சில் + புரோபெனசிட்
* செபூராக்ஸைம் + செராடியோபெப்டிடேஸ்
* அலோ வேரா (கற்றாழை) மற்றும் வைட்டமின் ஈ, விட்டமின் ஏ, ஜோஜோபா ஆயில், ஆரஞ்சு ஆயில், டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகைகள் கலந்த 10 வகையான தோல் மற்றும் அழகு சாதனக் களிம்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
