தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: கம்யூ., கட்சிகள் அறிவிப்பு

2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: கம்யூ., கட்சிகள் அறிவிப்பு

2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: கம்யூ., கட்சிகள் அறிவிப்பு

37


ADDED : செப் 13, 2026 01:54 PM

Follow on GoogleFavourite on Google

37

ADDED : செப் 13, 2026 01:54 PM


37
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக, திமுக, தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த தொகுதிகளில் தாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக கம்யூ., கட்சிகள் அறிவித்துள்ளனர். தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளரும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரும் போட்டியிடுவர் என்றும், இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்தார்.

நாளை மறுநாள் (செப்.,15) வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது தனித்து போட்டியிட உள்ளதாக, கம்யூ., கட்சிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us