தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கட்டட உரிமையாளரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

கட்டட உரிமையாளரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

கட்டட உரிமையாளரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய 2 போலீசார் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 26, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 06:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில், மணல் குவித்த கட்டட உரிமையாளரிடம், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, போலீசார் முத்துகிருஷ்ணன், 45, இளவரசன், 43, ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், தெற்குவாசல் பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, போக்குவரத்துக்கு இடையூறாக, கட்டட பணிக்காக, சாலையில் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றுமாறு, கட்டட உரிமையாளரிடம், ரோந்து போலீசார் முத்துகிருஷ்ணன், இளவரசன் கூறினர்.

மேலும், அவரிடம், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு, வழக்கு பதிந்தனர். இதில், ஆத்திரமுற்ற கட்டட உரிமையாளர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், முத்துகிருஷ்ணன், இளவரசன் லஞ்சம் வாங்கியது உறுதியானது.

இதையடுத்து, இருவரையும், மதுரை மாவட்ட கமிஷனர் ராஜேந்திரன், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us