கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு; பிரிட்டனில் 200 விமானங்கள் தாமதம்
கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு; பிரிட்டனில் 200 விமானங்கள் தாமதம்
ADDED : செப் 21, 2026 06:05 PM

லண்டன்: வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டனில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. 50க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தேசிய வான்வழி போக்குவரத்து சேவையான என்ஏடிஎஸ் (NATS) அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள பிரெஸ்ட்விக் மையத்தில் ஏற்பட்ட இந்தக் கோளாறு காரணமாக, மான்செஸ்டர், கிளாஸ்கோ மற்றும் பெல்பாஸ்ட் விமான நிலையங்களும், அபெர்டீன், நியூகாஸில், பிரிஸ்டல் மற்றும் லண்டன் சிட்டி விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளன. மேலும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 10க்கும் மேற்பட்ட விமானங்களும், ஈசிஜெட் நிறுவனத்தின் 50 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்த மாதத்தின் துவக்கத்தில் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 2 நாட்களில் 2000 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
