ஆயுதங்கள் கடத்தி வந்த 255 பாக்., ட்ரோன்கள் அழிப்பு
ஆயுதங்கள் கடத்தி வந்த 255 பாக்., ட்ரோன்கள் அழிப்பு
UPDATED : நவ 19, 2025 01:19 AM
ADDED : நவ 19, 2025 12:19 AM

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டு எல்லைக்குள் ஹெராயின், ஆயுதங்கள் போன்றவற்றை கடத்தி வந்த, 255 ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் இந்த ஆண்டு அழித்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், 425 கி.மீ., துாரத்தை நம் நாட்டின் பஞ்சாப் பகிர்ந்துள்ளது. இரு நாட்டு எல்லையில் நம் நாட்டை சேர்ந்த பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்த பி.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் ஜெனரல் அதுல் புல்ஸ்லே நேற்று அளித்த பேட்டி:
பனிக்காலத்தில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள், வெகு தொலைவு வரை கண்காணிக்க முடிவதில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை ட்ரோன்கள் எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி கடத்துகின்றன.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கடந்த, 14ம் தேதி வரை பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட் ட, 255 ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கடத்தி வரப்பட்ட, 329 கிலோ ஹெராயின், 16 கிலோ, மெத் ஆம்பெட்டமைன், 191 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

