அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி; செய்தி நேரலையின் போது சோகம்
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி; செய்தி நேரலையின் போது சோகம்
ADDED : செப் 16, 2026 11:57 AM

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவில் செய்த நேரலையின் போது, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான சாட்வொர்த் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் பஸ் ஒன்று விபத்தில் சிக்கியது. இது தொடர்பாக, என்பிசி செய்தி நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம், நேரலை செய்தியை தொகுத்து வழங்கி வந்தது.
செய்தி நேரலையின் போதே, இரு வணிக கட்டடங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால், ஏற்பட்ட தீயானது, சாலையில் இருந்த 4 வாகனங்களுக்கும் பரவியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 70 பேர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
இந்த விபத்து செய்தி நேரலையில் அப்படியே ஒளிபரப்பானது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
