தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/  இலகு பணியில் இருந்த 3,000 பேர் வழக்கமான பணிக்கு திரும்பினர்

 இலகு பணியில் இருந்த 3,000 பேர் வழக்கமான பணிக்கு திரும்பினர்

 இலகு பணியில் இருந்த 3,000 பேர் வழக்கமான பணிக்கு திரும்பினர்


ADDED : மே 10, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அரசு போக்குவரத்து கழகப் பணிமனைகளில், இலகு பணியில் இருந்த 3,000 பேர், ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில், தினமும் 20,000க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. 330 பணிமனைகளில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்கல் பிரிவு பணியாளர்கள் என, 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவ ரீதியாக, உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டுப்பாட்டு அறை, டிக்கெட் பிரிவு, பணப்பிரிவு ஆகியவற்றில், இலகு பணிகளில் எப்போதும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருப்பர்.

தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., மாறி மாறி, ஆட்சிக்கு வரும் போதெல் லாம், அந்த தொழிற்சங்கங் கள் போக்குவரத்து துறையில், பலமாக இருக்கும். அவர்களின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கும்.

அந்த நிலை தற்போது மாறிவிட்டது. புதிதாக த.வெ.க, ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3,000 ஊழியர்கள், மீண்டும் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இது குறித்து, அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழகங்களில், 30 சதவீதம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், அரசு பஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, போக்கு வரத்து பணிமனையில், இலகு பணியில் இருந்தவர்கள், மீண்டும் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு திரும்பியுள்ளனர்.

எனவே, உண்மையாகவே இலகு பணி தேவைப்படு வோருக்கு, தொழிற்சங்கங் கள் பேதமின்றி, உரிய மருத்துவ சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு, கட்டுப்பாட்டு அறை, டிக்கெட், கேஷ் ஷெக்சன் உள்ளிட்ட பிரிவுகளில் பணிகளை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us