தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/3வது டி-20: 127 ரன் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது இந்தியா

3வது டி-20: 127 ரன் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது இந்தியா

3வது டி-20: 127 ரன் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது இந்தியா

2


UPDATED : செப் 17, 2026 10:49 PM

ADDED : செப் 17, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : செப் 17, 2026 10:49 PM ADDED : செப் 17, 2026 07:41 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிக்களுக்கிடையான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 127 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான் 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி, டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று(செப்.,17)நடைபெற்றது. டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க ஆட்டக்காரர்களான வீரர்களான அபிஷே க் சர்மா (108 ரன்) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். சஞ்சு சாம்சன் (50ரன்) அரைசதம் அடித்தார். அதை தொடர்ந்து வந்த திலக் வர்மா(2 ரன்) சோபிக்கவில்லை.ஷிவம் துபே 14 ரன்னிலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களிலும் இஷான் கிஷன் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதிஷ்குமார் ரெட்டி 1 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்ஷாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 222 ரன்னை இந்தியா இலக்கு நிர்ணயித்தது.

222 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 15 ரன்னிலும் இப்ராஹிம் ஷத்ரன் 25 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மற்றவர்கள் சோபிக்கவில்லை ஓமர்ஷாய் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி,இறுதியில் 14.1 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்களுக்குள் சுருண்டது.

இந்நிலையில் இந்திய அணி, 127 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய பவுலர்கள் நித்திஷ்குமார் ரெட்டி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அக்ஷர் படேல் 2 விக்கெட் எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us