தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/3வது டி20 கிரிக்கெட்: பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 76 ரன்னில் சுருண்டது

3வது டி20 கிரிக்கெட்: பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 76 ரன்னில் சுருண்டது

3வது டி20 கிரிக்கெட்: பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 76 ரன்னில் சுருண்டது

5


UPDATED : ஜூலை 08, 2026 01:12 AM

ADDED : ஜூலை 08, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2026 01:12 AM ADDED : ஜூலை 08, 2026 12:09 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 'டி-20' போட்டியில், பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணிக்கு, 76 ரன்களில் சுருண்டு, 125 ரன் வித்தியாத்தில் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள 'உலக சாம்பியன்' இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி, 20 ஓவரில் 189/7 ரன் எடுத்தது. பின் மழை காரணமாக போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இந்திய அணி 190/7 ரன் எடுக்க, இங்கிலாந்து 19 ஓவரில் 191/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், ஒரே ஓவரில் 29 ரன் விட்டுக் கொடுத்து அதிர்ச்சி தந்தார். தற்போது இந்திய அணி 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது.

மூன்றாவது போட்டி நாட்டிங்காமில் நடந்தது. இந்திய அணியில் பிஷ்னோய் நீக்கப்பட்டு, பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டார். 15 வயது இளம் வைபவ் சூர்யவன்ஷி, தனது இரண்டாவது போட்டியில் பங்கேற்றார். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

பிரின்ஸ் நம்பிக்கை


இந்திய அணிக்கு துவக்கத்தில் அர்ஷ்தீப் சிங் அசத்தினார். முதல் ஓவரை 'மெய்டனாக' வீசினார். அடுத்து அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் பட்லர் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியின் 4வது ஓவரை வீசினார் அக்சர் படேல். இம்முறை 2வது பந்தில் சிக்சர் அடித்த பட்லர், 4வது பந்தில் ஒரு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து மிரட்டிய பட்லர், ஹர்ஷித் ராணா வீசிய ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது, பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் போல்டானார் பட்லர் (36).

ஹாரி புரூக்(16), ஜேக்கப் பெத்தல்(13), டாம் பான்டன்(0) நிலைக்கவில்லை. பின் சாம் கரணுடன் (41 நாட் அவுட்) இணைந்த பில் சால்ட் (70 ரன்) அரைசதம் அடித்த நிலையில், ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ்(14), ஆர்ச்சர்(5) இருவரும் ரன் அவுட் ஆகினர். 20 ஓவர் முடிவில், இங்கிலாந்து அணி, 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது.

பேட்டிங் சொதப்பல்:


கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் தந்தார். ஆர்ச்சர், ஜோஷ் டங் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மா (10) ஏமாற்றினார். வைபவ் சூர்யவன்ஷி, 13 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்த சிறிது நேரத்தில் இஷான் கிஷான் 13 ரன்னில் அவுட்டானார்.

ஷ்ரேயஸ் ஐயர் (5), அக்சர் படேல்(10) கைவிட்டனர். திலக் வர்மா(3), ராணா(9), ஷிவம் துபே(2), அர்ஷ்தீப் சிங்(4) மற்றும் வருண் சக்கரவர்த்தி(5) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணி 11.4 ஓவரில் 76 ரன்களுக்கு சுருண்டது. 125 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us