உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 29, 2026 06:26 PM
ADDED : ஜூன் 29, 2026 05:50 PM

அ நிறம் | அளவு
பெர்லின்: ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெர்மனியின் வட பகுதியில் ஸ்டேட் என்ற நகரில் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நகரில் உள்ள இளைஞர் மையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் தான் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் இல்லை.
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
