தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாட்ஸாப்பில் 5 பாதுகாப்பு குறைபாடுகள்: அரசின் கணினி நடவடிக்கை குழு எச்சரிக்கை

வாட்ஸாப்பில் 5 பாதுகாப்பு குறைபாடுகள்: அரசின் கணினி நடவடிக்கை குழு எச்சரிக்கை

வாட்ஸாப்பில் 5 பாதுகாப்பு குறைபாடுகள்: அரசின் கணினி நடவடிக்கை குழு எச்சரிக்கை


ADDED : நவ 28, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 02:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மொபைல் போன் மற்றும் கணினிகளில் பயன்படுத்தும், 'வாட்ஸாப்' செயலியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஐந்து பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில், கணினியில் 'வாட்ஸாப் வெப்' செயலி பயன்படுத்துவோருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்ற தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் கணினி அவசரகால நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், 'வாட்ஸாப்'பில் உள்ள ஐந்து பாதுகாப்பு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதன் விபரம்:

* ஆண்ட்ராய்டு போன்களுக்கு அனுப்பப்படும் சில போலி தகவல்கள் மூலம், 'வாட்ஸாப்'பில் சேமிக்கப்பட்டுள்ள கோப்புகளை அழிக்கவும், தனிப்பட்ட உரையாடல் விபரங்களைத் திருடவும் முடியும்

* 'வாட்ஸாப்'பின் தாய் நிறுவனமான, 'மெட்டா'வின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதை பயன்படுத்தி, சிலர் பயனர்களின் சாதனங்களுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது

* போலி இணைய இணைப்புகளுடன் 'வாட்ஸாப்' விளம்பரங்கள் வெளியாகின்றன. அவற்றை திறந்தால், பயனரின் தனிப்பட்ட தகவல்களை இணைய மோசடியாளர்கள் திருட வாய்ப்புள்ளது

* 'மெட்டா'வின் மற்றொரு செயலியான, -'இன்ஸ்டாகிராம்' ரீல்ஸ் எனப்படும் குறும் வீடியோக்களில் வரும் சில போலி தகவல்களுடன் தோன்றும் இணைப்புகளை திறந்தால், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் பாதிப்பு ஏற்படலாம்

* கணினியில் வாட்ஸாப் பயன்படுத்தும் போது அனுப்பப்படும் சில ஆபத்தான கோப்புகள், சாதாரண கோப்புகளைப் போல தோன்றுகிறது. அதை திறந்ததும் மூன்றாம் நபர் கணினிக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

'இந்த குறைபாடுகளை இணைய மோசடியாளர்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை' என, 'வாட் ஸாப்' தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் இழந்த நபர்



குஜராத்தின் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக். இவரது, 'வாட்ஸாப்'பிற்கு திருமண அழைப்பிதழ் பெயரில், கோப்பு வடிவிலான மோசடி செயலியை அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து அனுப்பி உள்ளனர். அதை திறந்தவுடன் அது மொபைல் போனில் பதிவிறக்கம் ஆகி உள்ளது. அதன் மூலம், மொபைல் போனின் கட்டுப்பாட்டை எடுத்து, மாலிக்கின் வங்கி கணக்கில் இருந்த 10 லட்சம் ரூபாயை மோசடி நபர்கள் சுருட்டியுள்ளனர். மோசடி பணத்தை மாற்ற, வங்கி கணக்கை வாடகைக்கு விட்டு 2 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்ற நபரை போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பணத்தை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us