தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வெளிநாடுகளில் இருந்து 615 தொல்பொருட்கள் மீட்பு

வெளிநாடுகளில் இருந்து 615 தொல்பொருட்கள் மீட்பு

வெளிநாடுகளில் இருந்து 615 தொல்பொருட்கள் மீட்பு

5


ADDED : ஜூலை 21, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : ஜூலை 21, 2026 07:45 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நம் நாட்டில் இருந்து, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 615 தொல் பொருட்களை, மத்திய அரசு மீட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள பழங்கால கலைப்பொருட்கள், அரிய தொல்பொருட்கள் உள்ளிட்டவற்றை, சர்வதேச கடத்தல் கும்பல்கள், இடைத்தரகர்கள் வாயிலாக திருடி, பல்வேறு நாடுகளுக்கு, பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர். கடந்த 1980 முதல் 2000ம் ஆண்டு வரை கடத்தப்பட்ட, கலைப் பொருட்களில், தமிழகத்தை சேர்ந்தவை அதிகம்.

அவற்றின் வரலாறு, கலை, பண்பாட்டு முக்கியத்துவத்தின் அடிப்படையில், அவை, பிரபல கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும் என ஆர்வலர்களும், மாநில அரசுகளும் வலியுறுத்தின.

இந்நிலையில், மத்திய அரசு, ராஜதந்திர நடவடிக்கையாக, தமிழகத்தை சேர்ந்த, சோழர் கால வெண்கலம் மற்றும் கல் சிலைகள், பழமையான நினைவுச் சின்னங்கள் உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்டவற்றை மீட்டு வருகிறது.

அந்த வகையில்,

கடந்த 2021ல் 159;

2022ல் 30;

2023ல் 115;

2024ல் 298;

2026ல் இதுவரை 13 என, மொத்தம் 615 தொல்பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us