UPDATED : ஆக 28, 2026 03:50 PM
ADDED : ஆக 28, 2026 03:31 PM

காத்மாண்டு: நேபாளத்தில் வெ ள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 85 இந்தியர்கள் உட்பட 117 வெ ளிநாட்டினர் மீட்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு அரசு தெ ரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட கடுமையான வெ ள்ளம் ரசுவா மாவட்டத்தை தாக்கியது. இதில் வீடுகள் , சாலைகள் பாலங்கள் என அடித்துச் செ ல்லப்பட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கி வருகிறது. 1,500 பேர் மாயமாகி உள்ளனர். 103 தமிழர்கள் உட்பட 300க்கும் மே ற்பட்டவர்கள் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் நே பாள ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 117 வெளிநாட்டினர் மீட்கப்பட்டு உள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
அவர்களில்
இந்தியர்கள் 85 பேர்
சீனர்கள் 16 பேர்
தென் கொரியாவை சேர்ந்த 9 பேர்
அமெரிக்கா மற்றும் இத்தாலியை சேர்ந்த தலா இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
மற்ற மூன்று பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல் இல்லை. மீட்கப்பட்டவர்கள் விரைவில் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
டில்லி வருகை
இதனிடையே, நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களும் விமானம் வாயிலாக டில்லி அழைத்து வரப்பட்டனர்.
