பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைகள் இந்தியாவில் கல்வி வளாகம் தொடங்கும்: பிரதமர் மோடி அறிவிப்பு
பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைகள் இந்தியாவில் கல்வி வளாகம் தொடங்கும்: பிரதமர் மோடி அறிவிப்பு
ADDED : அக் 09, 2025 03:40 PM

மும்பை: பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும் என பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மரை சந்தித்த பிறகு பிரதமர் மோடி அறிவித்தார்.
மும்பை ராஜ்பவனில் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே உள்ள உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன்- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இன்று கையெழுத்தான ஒப்பந்தம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். வர்த்தகத்தை அதிகரிக்கும் மற்றும் இரு நாடுகளிலும் உள்ள தொழில்கள் மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்கும்.
இந்தியாவிற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பிரிட்டன் வர்த்தக குழுவினருடன் இந்தியாவுக்கு பிரதமர் கேர் ஸ்டார்மர் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும், உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஸ்டார்மர் உடன் விவாதித்தேன். பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.