ADDED : மே 12, 2026 12:41 AM

நேப்பிடோ: மியான்மரின் சுரங்கப்பகுதியில், இரண்டரை கிலோ எடையுள்ள பிரமாண்ட ரத்தினக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரின் மண்டலே பகுதியில் உள்ள 'மோகோக்' நகரம், ரத்தினக் கற்களின் சொர்க்கமாக கருதப்படுகிறது.
இங்குள்ள சுரங்கம் ஒன்றில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஊதா கலந்த சிவப்பு நிறத்திலான 2.2 கி லோ, அதாவது, 11,000 காரட் எடை கொண்ட ராட்சத ரத்தினக்கல் கிடைத்துள்ளது.
தற்போது இந்த அபூர்வ ரத்தினக்கல் மியான்மர் தலைநகர் நேப்பிடோவில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
க டந்த 1996ம் ஆண்டு இ தே பகுதியில், 21,450 காரட் எடையுள்ள ஒரு ரத்தினக்கல் கண்டெடுக்கப்பட்டது. அதைவிட இது அளவில் சிறியது என்றாலும், தரத்தில் இதுவே ' நம்பர் 1 ' என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், தற்போது கிடைத்துள்ள ரத்தினக்கல்லின் மிதமான ஒளி ஊடுருவும் தன்மை மற்றும் அதீத பிரதிபலிப்பு ஆகியவற்றால், இதன் விலை பழைய ரத்தினக்கல்லை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
மியான்மரில் அதிக ளவு ரத்தினக் கற்கள் கிடைக்கின்றன. இருப்பினும், அங்கு நடக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் ராணுவ ஆட்சியின் அடக்குமுறை காரணமாக, அங்கிருந்து கற்களை வாங்க சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ன.
இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணம், உள்நாட்டுப் போருக்கு ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில் கண்டெடுக்கப் பட்ட பிரமாண்ட ரத்தினக்கல்.
