வங்கக்கடலில் நிலவுகிறது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவுகிறது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
UPDATED : நவ 23, 2025 03:37 PM
ADDED : நவ 23, 2025 02:32 PM

சென்னை: இலங்கையை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில், நவ., 25ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தமிழகத்தில் நாளை (நவ., 24) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. இதனால், தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.,26ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இலங்கையை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில், நவ., 25ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (நவ., 23) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* அரியலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* மதுரை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி
* தூத்துக்குடி
* தென்காசி
நாளை (நவ., 24) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி
* தென்காசி
* தூத்துக்குடி
* விருதுநகர்
* ராமநாதபுரம்
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகை
* மயிலாடுதுறை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

