தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி

பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி

பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி


UPDATED : மே 18, 2026 08:46 AM

ADDED : மே 18, 2026 08:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 08:46 AM ADDED : மே 18, 2026 08:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா: பீஹாரில் பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சசாரம் - பாட்னா பயணிகள் ரயில், பீஹாரின் சசாரம் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 6 மணியளவில் சென்றடைந்தது. அப்போது, திடீரென ரயிலில் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

பின்னர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டில்லிக்கு சென்ற ராஜதானி விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us