sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு

/

அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு

17


ADDED : ஏப் 21, 2026 04:25 PM

Google News

17

ADDED : ஏப் 21, 2026 04:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அதிமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்.23ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு அதிமுக ஏற்கனவே 297 வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ், தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தார்.

இந் நிலையில், 297 வாக்குறுதிகளுடன் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும், கட்டுமான தொழிலாளி பணியின் போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட மேலும் 10 வாக்குறுதிகளை அவர் இன்று (ஏப்.21) வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கூடுதல் வாக்குறுதிகளின் விவரம் வருமாறு;

* மா விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் அத்துக்கட்டு பண்டிகையை பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.

* கட்டடத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

*பனைத் தொழிலாளர்கள், பனைமரம் ஏறி தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

*அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்.

*கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் முந்திரி உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அதிகளவிலான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி விலையில்லாமல் வழங்கப்படும்.

*பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, கண்காணிக்க 24/7 war room மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும்.

* மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவதற்காக தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், அதற்காக வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

* பணிக்கு செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us