யூதர்கள் மீதான தாக்குதல்: ஆஸி., அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
யூதர்கள் மீதான தாக்குதல்: ஆஸி., அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
UPDATED : டிச 15, 2025 07:31 AM
ADDED : டிச 14, 2025 10:15 PM

டெல் அவிவ்: ஆஸ்திரேலியாவில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு அரசு யூத எதிர்ப்புவாதத்தை தூண்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் 'ஹனுக்கா' எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், பொதுமக்கள் 16 பேர், பயங்கரவாதி ஒருவன் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
தந்தை, மகன் அரங்கேற்றிய படுபாதகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த படு பாதக செயலை அரங்கேற்றிய நபர்கள், தந்தை, மகன் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில், தந்தை நேற்றைய சம்பவத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட, மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, '' உங்களது கொள்கை, யூத எதிர்ப்பு என்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது'' எனத் தெரிவித்து இருந்தேன். யூத எதிர்ப்பு கொள்கை என்பது புற்றுநோய் போன்றது. தலைவர்கள் மவுனமாக இருந்து நடவடிக்கை எடுக்காத போது உலகம் முழுவதும் பரவும் இவ்வாறு அவர் கூறினார்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான மோதலின் போது, பாலஸ்தீனத்தை தனி நாடாக ஆஸ்திரேலியா அங்கீகரித்தது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதனை மேற்க்கோள் காட்டி, பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

