தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பஞ்சாப்பில் பிஎஸ்எப் தலைமையகம் அருகே 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

பஞ்சாப்பில் பிஎஸ்எப் தலைமையகம் அருகே 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

பஞ்சாப்பில் பிஎஸ்எப் தலைமையகம் அருகே 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்


UPDATED : மே 06, 2026 10:01 AM

ADDED : மே 06, 2026 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 10:01 AM ADDED : மே 06, 2026 09:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமிர்தரஸ்: பஞ்சாப்பில் எல்லை பாதுகாப்பு படையின் தலைமை அலுவலகம் அருகே அடுத்தடுத்து இரு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் நேற்று (மே 05) ஜலந்தர் பகுதியில் ஸ்கூட்டரில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமிர்தசரஸ் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் தலைமை அலுவலகம் அருகே நேற்றிரவு மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை அலுவலகத்தின் அருகே போலீசார் குவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வபந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து அமிர்தசரஸ் எஸ்எஸ்பி சுஹைல் மிர் காசிம் கூறுகையில், 'யாரோ ஒரு நபர் எல்லைச் சுவரை நோக்கி எதோ ஒன்றை வீசிச் சென்றதாகவும், அதுவே வெடிப்புக்குக் காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,' என்றார். வெடிகுண்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பஞ்சாப்பில் ஒரே நாளில் அடுத்தடுத்த இரு தாக்குதல் சம்பவங்களால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us