தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அக்னி வீரர்கள் திருமணம் செய்ய அனுமதி? விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை

அக்னி வீரர்கள் திருமணம் செய்ய அனுமதி? விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை

அக்னி வீரர்கள் திருமணம் செய்ய அனுமதி? விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை

11


ADDED : நவ 06, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

11

ADDED : நவ 06, 2026 05:41 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அக்னி வீரர்களின் பணிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவர்கள் திருமணம் செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானம் ஆகியவற்றில் குறுகிய காலத்தில் இளைஞர்கள் பணியாற்றும் வகையில், 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

கடந்த 2022ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு, 17.5 முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டனர். அவ்வாறு சேர்ந்தவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்பட்டனர்.

மொத்தம் நான்கு ஆண்டுகால பணிக்காலத்தில், தகுதி அடிப்படையில் 25 சதவீதத்தினர் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும், மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அக்னி வீரர்களின் பணிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து, நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்படி, முதல் நான்கு ஆண்டு பணிக்காலம் முடிந்ததும், வழக்கமான ராணுவப் பணியில் நிரந்தரமாக தேர்வு செய்யப்படாத, 75 சதவீத அக்னி வீரர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய விதிகளின்படி, அக்னி வீரர்கள் முதல் நான்காண்டு பணிக்காலத்தில் திருமணம் செய்ய அனுமதி கிடையாது.

ராணுவப் பணியில் முழு கவனம் செலுத்துவதையும், கட்டுப்பாட்டைப் பராமரிப்பதையும் கருத்தில் கொண்டு, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு திருமண அனுமதி வழங்குவது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us