அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
ADDED : டிச 25, 2025 07:43 PM

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில், நான்கு கட்சிகள் இடையே போட்டி உருவாகியுள்ளது. இதனையடுத்து கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியவற்றை துவக்கி உள்ளன. அதே கட்சிகளுடன் களமிறங்க உள்ள திமுக, கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் உடன் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேவல், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அமைத்துள்ளார்.
இந்த குழுவில்
நத்தம் விஸ்வநாதன்
பொன்னையன்
ஜெயக்குமார்
பொள்ளாச்சி ஜெயராமன்
சி.வி.சண்முகம்
செம்மலை
வளர்மதி
ஓ.எஸ்.மணியன்
உதயகுமார்
வைகை செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கை தயாரிப்பார்கள் எனவும், சுற்றுப் பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

