sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பழங்கால இந்தியர்கள் கலாசாரம் அறிவியலை பரப்பினர்: மோகன் பகவத் பேச்சு

/

பழங்கால இந்தியர்கள் கலாசாரம் அறிவியலை பரப்பினர்: மோகன் பகவத் பேச்சு

பழங்கால இந்தியர்கள் கலாசாரம் அறிவியலை பரப்பினர்: மோகன் பகவத் பேச்சு

பழங்கால இந்தியர்கள் கலாசாரம் அறிவியலை பரப்பினர்: மோகன் பகவத் பேச்சு

1


ADDED : அக் 19, 2025 10:07 PM

Google News

1

ADDED : அக் 19, 2025 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பழங்கால இந்தியர்கள் மெக்சிகோ முதல் சைபீரியா வரை பயணித்து அறிவியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்பித்தனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது: நமது முன்னோர்கள் மெக்சிகோ முதல் சைபிரீயா வரை பயணித்தனர். அப்போது உலகிற்கு அறிவியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்பித்தனர். அவர்கள் மதம் மாற்றவில்லை. அல்லது மதத்தை திணிக்கவில்லை. நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமைக்கான செய்தியுடன் பயணித்தோம்.

பல படையெடுப்பாளர்கள் வந்து நம்மிடம் கொள்ளையடித்தனர். நம்மை அடிமைப்படுத்தினர். கடைசியாக வந்தவர்கள் நமது மனங்களை கொள்ளையடிக்க வந்தனர். நமது பலத்தையும், உலகிற்கு என்ன பகிர்ந்தோம் என்பதையும் நாம் மறந்துவிட்டோம். ஆன்மிக அறிவு இன்னும் செழித்து வளர்கிறது. நம்மிடம், அறிவியல் மற்றும் ஆயுதங்கள், வலிமை மற்றும் சக்தி, நம்பிக்கை மற்றும் அறிவு உள்ளது.

இந்திய அறிவியல் அமைப்பை தான் நாம் படிக்க வேண்டும். மெக்காலே கல்விமுறையை அல்ல. நமது அறிவுத்திறனின் அடித்தளம் அந்தக் கல்வி முறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறது. உடலாலும், மூதாதையர்களாலும் இந்தியர். ஆனால், இதயம் மற்றும் மனதால் வெளிநாட்டினர். ஒரே வித்தியாசம் நாம் எந்த அளவுக்கு இருக்கிறோம் என்பது தான். இப்போது நாம் அதில் இருந்து முற்றிலும் விலக வேண்டும். அதிர்ஷ்டவசமாக மேற்கத்திய நாடுகளின் மேம்பட்ட அறிவியல் நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் ஒரு நிலையை அடைந்துள்ளது.இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.






      Dinamalar
      Follow us