UPDATED : ஜூன் 05, 2026 01:51 PM
ADDED : ஜூன் 05, 2026 10:46 AM

சென்னை: பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் உறுதி செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த, இரு ஆண்டுகளிலேயே, விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார். அதை பின்பற்றி தமிழக அரசியலில், புதிய பாதையில் பயணிக்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இது குறித்த விபரத்தை, பா.ஜ., தலைமைக்கு தெரிவித்து, கட்சியிலிருந்து விலகுவதற்காக, கடந்த 1ம் தேதி, டில்லி சென்றார்.
பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய அமைப்பு பொது செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, கட்சியில் இருந்து விலகும் முடிவை தெரிவித்தார். தற்போது பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு அண்ணாமலை சென்னை திரும்புகிறார்.
யார் இந்த அண்ணாமலை?
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கே.அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றினார். கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.,வின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் அழைப்பை ஏற்று, போலீஸ் பதவியை ராஜினாமா செய்து, 2020ல் பா.ஜ.,வில் இணைந்தார்.
2021ல்...
2024ல்...
2025ல்...
2026ல்...
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு: தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
