தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

21


UPDATED : செப் 28, 2026 05:18 PM

ADDED : செப் 28, 2026 03:05 PM

Follow on GoogleFavourite on Google

21

UPDATED : செப் 28, 2026 05:18 PM ADDED : செப் 28, 2026 03:05 PM


21
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ' ஜெம்' கிரானைட்ஸ் தொழில் வர்த்தகர் வீரமணி மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் மற்றொரு போக்சோ வழக்கை பதிவு செய்தனர்.

கிரானைட்ஸ் தொழிலில் கோலோச்சிய தொழில் வர்த்தகர் வீரமணி, சிறுமியரை பாலியல் வன்முறை செய்த குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், '' கடந்த 2004 ம் ஆண்டு 16 வயதான எனது மகளை கல்வி உதவித்தொகை வழங்குவதாக, வீட்டிற்கு வரவழைத்து வீரமணி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார்,'' என அந்த பெண் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதன் மீது சென்னை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புகார் எண் அறிவிப்பு


வீரமணி வழக்கு தொடர்பாக ஆதாரங்கள், தகவல்கள் இருந்தால், சிறப்பு புலனாய்வு குழுவை 9345319676 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us