தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/உலகம் முழுவதும் ஆப்பிள் சேவைகள் திடீர் முடக்கம்; கூகுளிலும் பாதிப்பு: பயனாளர்கள் கடும் அவதி

உலகம் முழுவதும் ஆப்பிள் சேவைகள் திடீர் முடக்கம்; கூகுளிலும் பாதிப்பு: பயனாளர்கள் கடும் அவதி

உலகம் முழுவதும் ஆப்பிள் சேவைகள் திடீர் முடக்கம்; கூகுளிலும் பாதிப்பு: பயனாளர்கள் கடும் அவதி


ADDED : நவ 18, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியச் சேவைகளான ஐ-கிளவுட், ஆப் ஸ்டோர், ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் சப்போர்ட் ஆகியவற்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், பல நாடுகளில் உள்ள பயனாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

​பாதிக்கப்பட்ட சேவைகள்:


​அமெரிக்க நேரப்படி மதியம் 11:30 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10:00 மணி) இந்தச் சேவைப் பாதிப்புகள் குறித்து ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்தன. ​ஆப்பிள் கணக்குகளில் உள்நுழைவது, கிளவுட் சேவைகளைப் பயன்படுத்துவது மற்றும் புதிய சாதனங்களைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் பயனாளர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஆப்பிள் வாலட், ஆப்பிள் மியூசிக் ஆகிய சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

​அமெரிக்கா மட்டுமின்றி பிரேசில், கிரீஸ் மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனாளர்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவிட்டுள்ளனர்.

​ஆப்பிள் மவுனம்:


​பயனாளர்களிடம் இருந்து புகார்கள் குவிந்த போதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ 'சிஸ்டம் ஸ்டேட்டஸ்' பக்கத்தில், இந்தச் சேவைகள் அனைத்தும் வழக்கம்போலச் செயல்படுவதாகவே காட்டப்பட்டது. இந்தத் திடீர் முடக்கம் குறித்து ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இருந்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. சேவைகள் எப்போது சீராகும் என்ற காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.

கூகுளிலும் பாதிப்பு:


​இதற்கிடையே, கூகுள் பயனாளர்கள் சிலரும் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜிமெயில், கூகுள் சர்ச் மற்றும் ஆப் ஸ்டோர் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. அக்கவுண்ட் உள்நுழைவது, மெசேஜ் அனுப்புவது, இ-மெயில் பயன்பாடு, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பயனாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us