UPDATED : நவ 16, 2026 02:40 PM
ADDED : நவ 16, 2026 07:16 AM

-நமது நிருபர்-
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில், 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இக்கூட்டமைப்பு, பிராந்திய வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆசியான் அமைப்புடன் பேச்சு நடத்தும் நாடுகள் என்ற அந்தஸ்தில் உள்ளன.
இந்த ஆண்டு ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் வகிப்பதால், அதன் தலைநகர் மணிலாவில் இன்று (நவம்பர் 16) முதல் 18 வரை மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி, இன்று நவம்பர் 16ம் தேதி பிலிப்பைன்ஸ் சென்றார். மேலும், ஆசியான் அமைப்பு நடத்தும் ஆசியான் - இந்தியா மாநாடு, ஆசியான் - கிழக்காசிய மாநாடு போன்றவற்றிலும் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் வர்த்தகம், பாதுகாப்பு குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பான குவாட் மாநாடு நடக்க உள்ளது.
