ஆசிய கோப்பை கிரிக்கெட்: அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்
UPDATED : செப் 26, 2025 09:31 PM
ADDED : செப் 26, 2025 07:50 PM

துபாய்: ஆசிய கோப்பை டி - 20 தொடரில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.3ஓவரில்4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் 12 ரன்னிலும் அவுட்டானார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி-20' தொடர் நடக்கிறது. இந்தியா ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டது. இலங்கை வாய்ப்பை இழந்துவிட்டது. இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் முக்கியத்துவமில்லாத 'சூப்பர்-4' போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இலங்கை வெற்றி பெறும் பட்சத்தில் அது அந்த அணிக்கு ஆறுதலாக இருக்கும். இரு தரப்பு தொடர்கள் அல்லாத இந்திய அணி கடைசியாக விளையாடிய 30 போட்டிகளில் 29ல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்னில் தீக்ஷனா பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஹசரங்கா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். இந்திய அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்துள்ளது.
இந்திய அணியில் பும்ரா மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்சித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விபரம்:
அபிஷேக் ஷர்மா
சுப்மன் கில்
சூர்யகுமார் யாதவ்
திலக் வர்மா
சஞ்சு சாம்சன்
ஹர்திக் பாண்டியா
அக்சர் படேல்
ஹர்ஷித் ராணா
குல்தீப் யாதவ்
வருண் சக்கரவர்த்தி
அர்ஷ்தீப் சிங்