UPDATED : செப் 07, 2025 11:34 PM
ADDED : செப் 07, 2025 09:25 PM

ராஜ்கிர்: ஆசிய கோப்பை தொடரின் பைனலில் தென் கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பீஹாரின் ராஜ்கிர் நகரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடந்தது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன.
ஜப்பான், கஜகஸ்தான், வங்கதேசம், சீன தைபே என நான்கு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இந்தியா, சீனா, மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா என நான்கு அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறின.
இன்று நடந்த பைனலில் இந்திய அணி 4- 1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் தில்ப்ரீத்(2) மற்றும் சுக்ஜித் , அமித் ரோஹிதாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். தென் கொரியா அணி ஒரு கோல் மட்டும் போட்டது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டு உளளார். பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது: இந்திய ஹாக்கி மற்றும் இந்திய விளையாட்டுகளுக்கு பெருமை சேர்க்கும் தருணம். வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டு உள்ளார்.