தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கரசேவகர்கள் மீது தாக்குதல்: நியாயப்படுத்திய சமாஜ்வாதி எம்.பி.,

கரசேவகர்கள் மீது தாக்குதல்: நியாயப்படுத்திய சமாஜ்வாதி எம்.பி.,

கரசேவகர்கள் மீது தாக்குதல்: நியாயப்படுத்திய சமாஜ்வாதி எம்.பி.,

8


ADDED : நவ 10, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

8

ADDED : நவ 10, 2026 12:49 AM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: 'கடந்த 1990ல் உத்தர பிரதேசத்தில் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது அரசியலமைப்பை பாதுகாக்கவே' என, சமாஜ்வாதி கட்சி லோக்சபா எம்.பி., சனாதன் பாண்டே தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1990ல் ராமஜென்மபூமி போராட்டத்தின் போது, பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தை நோக்கி முன்னேற முயன்ற கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில், 28 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முலாயம் சிங்கின் மகனும், சமாஜ்வாதி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ், அடுத்த மாதம் அயோத்தியில் உள்ள ராமர் மற்றும் ஹனுமன் கோவில்களுக்கு சென்று வழிபட திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் விமர்சித்த பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், 'துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட கரசேவகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி., சனாதன் பாண்டே, 'துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், கடந்த 35 ஆண்டுகளாக முலாயம் சிங்கை பா.ஜ., விமர்சித்து வருகிறது. 'அப்போதைய சூழலில், நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும், அரசியல் அமைப்பை பாதுகாக்கவுமே துப்பாக்கிச் சூடு நடத்த அவர் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் பொதுமக்களை பா.ஜ., தவறாக வழி நடத்துகிறது' என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us