தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்., 15 முதல் துவக்கம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்., 15 முதல் துவக்கம்
ADDED : ஜூன் 23, 2026 04:26 PM

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ' தங்க மோதிரம் திட்டம்' செப்டம்பர் 15 அன்று துவக்கி வைக்கப்பட உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழக அரசின் சுகாதார சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுததவும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறவும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் '' தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்'' செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.755.83 கோடி நிதிஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோர தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இத்திட்டத்தின் கீழ் ஜூன் 22 ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பலன்பெறுவார்கள். இந்தத் திட்டத்தை செப்.,15 முதல் முதல்வர் விஜய் துவக்கிவைக்க உள்ளார்.
