தடையின்றி எரிபொருள் விநியோகம்; பிரதமர் மோடியை பாராட்டிய ஆஸி., பிரதமர் அந்தோனி அல்பானீஸ்
தடையின்றி எரிபொருள் விநியோகம்; பிரதமர் மோடியை பாராட்டிய ஆஸி., பிரதமர் அந்தோனி அல்பானீஸ்
ADDED : செப் 26, 2026 09:48 PM

புதுடில்லி: மேற்காசியாவில் போர் நிலவி வரும் சூழலிலும், பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பாராட்டியுள்ளார்.
'ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்' என்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; மேற்காசிய போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இப்படிபட்ட காலகட்டத்தில் யாரும் செய்திடாததை பிரதமர் மோடி செய்துள்ளார்.
மனித வரலாற்றிலேயே எந்த பிராந்தியத்திலும், எந்த நாட்டிலும் இல்லாத வகையில், பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அதிகமான மக்களுக்கு எரிபொருள் கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.
மேற்காசியாவில் கச்சா எண்ணெய் கொள்முதலில் சிக்கல் ஏற்பட்ட போது, வெனிசுலா, பிரேசில், நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்தது. குறிப்பாக, ரஷ்யா மற்றும் பிற நாடுகளிடமிருந்தும் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. அவரது இந்த 11 ஆண்டு கால ஆட்சியில் எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 41 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டு மக்களுக்கு தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்ய முடிந்தது, இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார்.
