உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : மார் 27, 2026 09:36 PM
ADDED : மார் 27, 2026 09:04 PM

அ நிறம் | அளவு
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தனர்.
அந்த நெடுஞ்சாலையில் ஜீரோ பாயிண்ட் முதல் மினிமார்க் வரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனியில் பல வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
