ADDED : அக் 31, 2025 11:48 PM

ஹைதராபாத்: தெலு ங்கானா அமைச்சராக, காங்கிரஸ் மூத்த தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீன், 62, நேற்று பதவியேற்றார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட் சி நடக்கிறது.
இம் மாநில அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், மாநில காங்., செயல் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீனை அமைச்சராக்கும்படி, கட்சி மேலி டத்துக்கு மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, மாநில மேல் சபை உறுப்பினராக முகமது அசாருதீன் கடந்த ஆகஸ்டில் பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹைதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அப்போது, அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்றார்.
அவருக்கு கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிர மாணம் செய்து வைத்தார். தெலுங்கானா சட்ட சபை பலத்தின்படி, முதல்வர் உட்பட 19 பேர் அமைச்சரவையில் இடம் பெறலாம்.
தற்போது முகமது அசாருதீன் சேர்க்கப்பட்டு உள்ளதால், அமைச்சரவையின் பலம் 17 ஆக அதிகரித்துள்ளது.
ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில், நவ., 11ல் தேர்தல் நடக்கிறது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியை கைப்பற்றவே, முகமது அசாருதீனை அமைச்சரவையில் சேர்த்துள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.

