தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/துணை விமானியை விடுவிக்க கூறினார்களா பிளைதுபாய் ஊழியர்கள்; பயணிகள் பேட்டியால் அதிர்ச்சி

துணை விமானியை விடுவிக்க கூறினார்களா பிளைதுபாய் ஊழியர்கள்; பயணிகள் பேட்டியால் அதிர்ச்சி

துணை விமானியை விடுவிக்க கூறினார்களா பிளைதுபாய் ஊழியர்கள்; பயணிகள் பேட்டியால் அதிர்ச்சி

23


ADDED : அக் 04, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 03:40 PM

23


23
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர்-

இஸ்ரேல் சென்ற பிளை துபாய் விமானத்தை கடத்த முயன்ற துணை விமானியை விடுவிக்க வேண்டும் என அவ்விமான ஊழியர்கள் கோரியதாக தெரிகிறது.

இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை தாக்கி விமானத்தை கடத்த முயன்ற ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விமானத்தில் நடந்தது குறித்து சிலர் பதிவு செய்த வீடியோவை இஸ்ரேலை சேர்ந்த ஐ24 நியூஸ் டிவி நிறுவனம் வெளியிட்டது.

45 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், துணை விமானி, ரத்தக்கறை படித்த உடைகளுடன், கைகள் பின்புறம் கட்டப்பட்டு முழங்காலிட்டு அமர்ந்திருக்கிறார்.

பயணிகள் போலீஸ் மட்டும் என தொடர்ந்து கூறுகின்றனர். ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்; இன்னும் ஐந்து நிமிடம் என மற்றொரு பயணி கூறுவது கேட்கிறது. அவ்வளவு நேரம் துணை விமானியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயணிகள், போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தது இதில் தெளிவாக உள்ளது.

இதனிடையே, இந்த துணை விமானியை பிடித்த பயணிகளில் இருவர் நியூயார்க் போஸ்ட் இதழக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பயங்கரவாதியான அந்த துணை விமானியின் கைகட்டுகளை அவிழ்த்துவிட வேண்டும் என பிளைதுபாய் குழுவினர் எங்களிடம் கேட்டனர். அதற்கான காரணம் தெரியாது.இதனால், எங்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வாக்குவாதம் மூண்டதை தொடர்ந்து எந்த சூழ்நிலையிலும் துணை விமானியை விடுவிக்க முடியாது என தெளிவுபடுத்தினோம்.

அதற்கு அவர்கள், ''நீங்கள் கடவுள் கிடையாது. அவரை கொல்லப்போவதில்லை,'' என்றனர்.

அதற்கு,'' நாங்கள் அவரை கொல்லமாட்டோம், எங்களை கொல்லாமல் இருக்க வேண்டும் என மட்டுமே விரும்பினோம்.'' என்றோம்.

அவரை விசாரிக்க வேண்டும் ஆனால், அவர் உயிருடன் இரக்க வேண்டும். இதற்காக ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கினோம்.பயணிகள் அவர்களது இருக்கைக்கு திரும்பி செல்ல வேண்டும் என விமான குழுவினர் வலியுறுத்தினர்.

''இனிமேல் நாங்கள் தான் பொறுப்பில் இருப்போம். நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்.'' என்றோம். இந்த தாக்குதலில் விமான பணியாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இவ்வாறு துணை விமானியை பிடித்தவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us