சூரிய, காற்றாலை திட்டங்களுக்கு பேட்டரி சேமிப்பு கட்டாயமாகிறது; மத்திய அரசு மெகா திட்டம்
சூரிய, காற்றாலை திட்டங்களுக்கு பேட்டரி சேமிப்பு கட்டாயமாகிறது; மத்திய அரசு மெகா திட்டம்
ADDED : செப் 04, 2026 10:09 PM

புதுடில்லி: புதிய சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் பேட்டரி சேமிப்பு வசதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, வரும் 2027 ஜூலை முதல், செயல்பாட்டுக்கு வரும் புதிய திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படுவது கட்டாயமாக உள்ளது.
மத்திய மின்சார ஆணையம் தயாரித்துள்ள வரைவு விதிமுறைகளின்படி, புதிய சூரிய மின் மற்றும் தரைப்பகுதி காற்றாலை திட்டங்களில், குறைந்தது 10 சதவீத மின் உற்பத்தி திறனுக்கு இணையான அளவில், 2 மணி நேரத்துக்கு மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி வசதி இருக்க வேண்டும்.
வரும் 2029 ஜூலை முதல், இந்த விதிமுறை மேலும் கடுமையாக்கப்பட உள்ளது. அப்போது, குறைந்தது 10 சதவீத திறனுக்கான மின்சாரத்தை 4 மணி நேரம் சேமிக்கும் வகையில் பேட்டரி வசதி அமைக்க வேண்டும்.
