தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆர்டிஐ சட்டத்தில் கிரிக்கெட் வாரியம் வராது: மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

ஆர்டிஐ சட்டத்தில் கிரிக்கெட் வாரியம் வராது: மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

ஆர்டிஐ சட்டத்தில் கிரிக்கெட் வாரியம் வராது: மத்திய தகவல் ஆணையம் உத்தரவு


ADDED : மே 18, 2026 04:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 04:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:'' இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தகவல் அறியும் சட்டம்(ஆர்டிஐ) ன் கீழ் வராது ,'' என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு பிசிசிஐயை பொது நிறுவனம் என அறிவித்து, ஆர்டிஐ அதிகாரிகளை நியமிக்க அப்போது தலைவராக இருந்த அந்த அமைப்பின் தலைவர், செயலாளருக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. ஆன்லைனிலும், ஆப்லைனிலும் மனுக்களை பெற்று பதிலளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து பிசிசிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ மேலமுறையீடு செய்தது.

அப்போது இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிசிசிஐ மனுவை மீண்டும் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க, மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதனை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், கடந்த 2018 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், பிசிசிஐ தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது. அரசின் கண்காணிப்பு, பிசிசிஐ செயல்பாட்டை மேம்படுத்தும் என கணிப்பது பொருத்தமற்றது. அரசின் கட்டப்பாடு பிசிசிஐயின் சமப்படுத்தப்பட்ட பொருளாதார கட்டமைப்பை பாதிக்கும்.

விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி லோதா குழுவின் சீர்திருத்தப் பரிந்துரைகள் வெறும் ஆலோசனை மட்டுமே. அவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)- ல் உள்ள சட்ட விதிகளை மீற முடியாது என மத்திய தகவல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us