மாற்றத்தை உருவாக்குபவராக இருங்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் துக்காராம் அறிவுறுத்தல்
மாற்றத்தை உருவாக்குபவராக இருங்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் துக்காராம் அறிவுறுத்தல்
UPDATED : செப் 27, 2026 10:49 AM
ADDED : செப் 27, 2026 10:47 AM

மும்பை: தலைமை என்பது நீங்கள் பெற்றிருக்கும் அதிகாரம் சார்ந்தது கிடையாது; நீங்கள் உருவாக்கும் மாற்றத்தைப் பொறுத்தது; மாற்றத்தை உருவாக்குபவராக இருங்கள் என மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு துறை ஆணையர் துக்காராம் முண்டே அறிவுறுத்தியுள்ளார்.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருபவர் துக்காராம் முண்டே. இவரது அதிரடி நடவடிக்கையால் மும்பை உணவகங்களில் தூய்மை, உணவின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணமாக துக்காராம் முண்டேவின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இவர் மாற்றத்தை உருவாக்குபவராக இருங்கள் என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: தலைமை என்பது நீங்கள் பெற்றிருக்கும் அதிகாரம் சார்ந்தது அல்ல; நீங்கள் உருவாக்கும் மாற்றத்தைப் பொறுத்தது. மக்களின் பங்களிப்பு இல்லாமல் கொள்கையாலும், நல்லாட்சியாலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. நல்லாட்சியை மக்களோடு இணைந்து உருவாக்க வேண்டும்.
பொதுத் தலைமை என்பது மக்களின் நம்பிக்கையைப் பெற்று, பொறுப்புணர்வை உருவாக்கி, மாற்றத்திற்கான செயல்பாட்டில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். ஒரு தனி நபரால் எவ்வளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் முக்கியத்துவம் கிடையாது. இவ்வாறு துக்காராம் முண்டே கூறியுள்ளார்.
