தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி: அமைச்சர் வன்னி அரசு தகவல்

 விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி: அமைச்சர் வன்னி அரசு தகவல்

 விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி: அமைச்சர் வன்னி அரசு தகவல்

129


ADDED : செப் 23, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

129

ADDED : செப் 23, 2026 06:21 AM


129
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''சமூக நீதி விடுதி மாணவர்களுக்கு, மாட்டிறைச்சி வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,'' என, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துஉள்ள, எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், நேற்று முன்தினம் இரவு அமைச்சர் வன்னி அரசு, திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, அதன் தரம், மெனு மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

பின் அவர் அளித்த பேட்டி: சமூக நீதி விடுதிகளில், சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. சில மாணவர்கள், உணவு பட்டியலில் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

'கிராமப்புறங்களில் இருந்து வந்துள்ளதால், எங்கள் வீடுகளில் மட்டன் அதிகம் சாப்பிட்டதில்லை. எங்களுக்கு மாட்டிறைச்சி வேண்டும்' என, கோரிக்கை விடுக்கின்றனர். சில மாணவர்கள் வேண்டாம் என்கின்றனர். இது குறித்து, மாணவர்கள், அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

விபரீதமான முடிவு: கிருஷ்ணசாமி எச்சரிக்கை

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை; மாட்டிறைச்சி, நம் தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நம் கலாசாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள். ஒரு தவறான, விபரீதமான முடிவை, அமைச்சர் வன்னி அரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம். ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கான செயலில் ஈடுபட்டால், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us