தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் வாய்ப்பு பிரகாசம்

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் வாய்ப்பு பிரகாசம்

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் வாய்ப்பு பிரகாசம்

3


UPDATED : நவ 28, 2026 11:23 AM

ADDED : நவ 28, 2026 11:21 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : நவ 28, 2026 11:23 AM ADDED : நவ 28, 2026 11:21 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த முறை இண்டி கூட்டணியால் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறு வரையறை மசோதா, இந்த முறை திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறுவதற்கு, லோக்சபா உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருடைய ஆதரவு தேவை. இத்தகைய ஆதரவு இல்லாத காரணத்தால் கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட மசோதா தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தேசிய மற்றும் தமிழக அரசிலியல் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, 'இண்டி' கூட்டணி முன் இருந்ததை காட்டிலும் வலு இழந்துள்ளது. அந்த கூட்டணியில் இருந்த திமுக வெளியேறி உள்ளது. அதே கூட்டணியில் இருந்தாலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. ஆந்திராவின் ஜெகன் ரெட்டி கட்சியும் மசோதாவுக்கு ஆதரவு அறிவித்துள்ளது.

இதனால் மசோதா நிறைவேற தேவையான 'மேஜிக்' எண்ணை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பார்லி நிலவரம் மொத்த எண்ணிக்கை 543 காலியிடம் 3 தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற தேவையான ஆதரவு - 360 பேர் தேஜ கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் எம்பி.,க்களுடன் திமுக 22 பேர், சரத் பவார் கட்சி 8 பேர், ஜெகன் ரெட்டி கட்சியினர் 4 பேரையும் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 358 ஆகி விடுகிறது.

எம்.பி.,க்களில் சிலர் அவைக்கு வராமல் இருக்கவும், சிலர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தேவையான ஆதரவு எண்ணிக்கை 360 என்ற நிலையில் இருந்து 358க்கு கீழே குறையும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதனால் இந்த முறை மசோதா உறுதியாக நிறைவேறும் வாய்ப்புள்ளது என்கின்றனர், அரசியல் கட்சியினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us