சொந்த மக்கள் மீது குண்டு வீச்சு: ஐநாவில் பாகிஸ்தானை வறுத்தெடுத்தது இந்தியா!
சொந்த மக்கள் மீது குண்டு வீச்சு: ஐநாவில் பாகிஸ்தானை வறுத்தெடுத்தது இந்தியா!
ADDED : செப் 24, 2025 10:58 AM

நியூயார்க்: சொந்த மக்கள் மீது குண்டு வீசி வான்வழி தாக்குதல் நடத்தியது குறித்து ஐநாவில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்தது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில், விமானப்படை வெடிகுண்டுகளை வீசியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசி தாக்குதல் நடத்தியது குறித்து ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய தூதர் தியாகி பேசியதாவது: இந்தியாவிற்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கூறி, இந்த மன்றத்தை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்கிறது. தங்கள் சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தி பாகிஸ்தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது.
பாகிஸ்தான் தங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்திய பிரதேசத்தை காலி செய்து விட்டு, அவர்களின் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்துவது நல்லது. ஐ.நா. தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர். மறுபுறம் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுவீசுகின்றனர். இவ்வாறு இந்திய தூதர் தியாகி கடும் பதிலடி கொடுத்தார்.