தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளர் கைது

13


ADDED : ஆக 20, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : ஆக 20, 2026 06:33 PM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார் : மின் இணைப்பு வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மின் பொறியாளர் ரகுராமன், 54, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், காடூரை சேர்ந்தவர் பழனிவேல், 31. இவர், புதிதாக கட்டும் வீட்டுக்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்க, துங்கபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணபித்தார். புதிய மின் இணைப்பு வழங்க, தனக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, உதவி மின் பொறியாளர் ரகுராமன், பழனிவேலுவிடம் கேட்டார்.

லஞ்சம் தர விருப்பமில்லாத பழனிவேல், ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, இன்று மதியம், ரகுராமனிடம், பழனிவேலு பணத்தை வழங்கினார். மறைந்திருந்த போலீசார், ரகுராமனை கையும் களவுமாக கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us