ADDED : ஆக 05, 2026 04:50 AM

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழக அரசு, மே 10ம் தேதி பொறுப்பேற்றது. 2026 - 27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, இன்று தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக, காலை 10:00 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அதை தொடர்ந்து, வேளாண் துறைக்கான, தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதி அமைச்சர் மரியவில்சன் பொது பட்ஜெட், வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி உள்ளனர். முதல்வர் விஜய் ஒப்புதல் பெற்று, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் அறிக்கை, அமைச்சர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இருவரும் புதியவர்கள் என்பதால், அதை எவ்வாறு படிப்பது, எங்கெங்கு நிறுத்துவது, எங்கெங்கு உவமைகள் சொல்வது என, துறை செயலர்கள் மற்றும் அரசியல் பி.ஏ.,க்கள் வாயிலாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
